கொச்சைப்படுத்திவிட்டீர்கள் ஜனனியை பார்த்து கோபப்பட்ட ADK- வைரலான புரொமோ
பிக்பாஸ் 6
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என 3 மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் தற்போது 6வது சீசன் ஒளிபரப்பாகிறது, 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி சிலரின் வெளியேற்றத்துடன் ஓடுகிறது.
இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். இந்த வாரம் கமல்ஹாசன் அவர்கள் இடம்பெறும் வாரம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது என்பது தெரிகிறது.
புதிய சண்டை
பிக்பாஸ் ஜனனியிடம் வீட்டில் யார் முகமூடி போட்டுக் கொண்டு இருக்கிறார் என கேட்க அதற்கு அவர் உடனே ADK என கூறுகிறார். இதைக்கேட்ட அவர் உங்கள் மீது எனக்கு தனி அக்கறை இருந்தது, அதை கொச்சைப்படுத்திவிட்டீர்கள், இந்த வீட்டில் யார் மீதும் இல்லாத பாசம் உங்கள் மீது இருந்தது என கத்தி கோபப்படுகிறார்.
அந்த புரொமோ தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
