95 நாட்களை கடந்து பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறிய விசித்ராவின் முழு சம்பள விவரம்- எத்தனை கோடி தெரியுமா?
பிக்பாஸ் 7
ஆங்கிலம் மற்றும் இந்தியில் பல வருடங்களாக ஒளிபரப்பாக வந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
மக்களிடம் வெற்றிப்பெற்ற இந்த நிகழ்ச்சி தமிழில் 2017ம் ஆண்டு வந்தது, விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஒளிபரப்பாக தொடங்கியது.
அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாகி கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டது பிக்பாஸ் 7வது சீசன். இந்த 7வது சீசனில் 90களில் கவர்ச்சி நடிகையாக நடித்துவந்த விசித்ராவும் கலந்துகொண்டார்.

சம்பள விவரம்
விஜய்யில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தவருக்கு அப்படியே பிக்பாஸ் 7 வீட்டிற்குள் செல்லவும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியில் இளம் போட்டியாளர்களுக்கு மத்தியில் தரமான போட்டியாளராக இருந்து வந்தார்.
இவர் சினிமா பயணத்தில் சந்தித்த ஒரு விஷயம் குறித்து பேச அது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது விசித்ரா 95 நாட்களை கடந்து இறுதி மேடைக்கு செல்லும் நேரத்தில் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
ஒரு நாளைக்கு ரூ. 40 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்ற இவர் 95 நாட்களுக்கு மேல் இருந்துள்ளார். இந்த விவரத்தை வைத்து கணக்கு போட்டால் அவர் ரூ. 35 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri