ரசிகர்கள் கொடுத்த சூப்பரான சர்ப்ரைஸ், பிக்பாஸ் 7 மணிசந்திரா வெளியிட்ட கலக்கல் வீடியோ- நெகிழ்ந்த பிரபலம்
பிக்பாஸ் 7
கடந்த வருடம் 2023, அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் 7.
18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு பல மாற்றங்களுடன், புதிய விஷயங்களுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்திற்கு கிடைத்த மிகப்பெரிய விருது- ரசிகர்களின் வாழ்த்து மழையில் பிரபலம்
இதில் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்த தினேஷ் மற்றும் அர்ச்சனாவால் நிகழ்ச்சியே மாறிவிட்டது.
அடுத்தடுத்து விளையாட்டும் விறுவிறுப்பாக செல்ல ஜனவரியில் 100 நாட்களை கடந்து முடிந்துவிட்டது. இதில் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா மக்கள் மனதை கவர்ந்து வெற்றியாளராக தேர்வாகிவிட்டார்.
மணி வீடியோ
அர்ச்சனாவை தொடர்ந்து மக்கள் மனதில் அதிகம் இடம் பிடித்தவர் தான் மணி. நடனத்தின் மூலம் விஜய் டிவியில் நுழைந்து பிரபலமான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது உண்மையான கேரக்டர் மூலம் மக்களை கவர்ந்துவிட்டார்.
பிக்பாஸ் 7 பிறகு அவருக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ஷேர் செய்து மணிசந்திரா தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.