எவ்ளோ சப்போர்ட், எவ்ளோ லவ்- பிக்பாஸ் 7 பின் நிக்சன் போட்ட பதிவு, திட்டும் ரசிகர்கள்
பிக்பாஸ் 7
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான்.
அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட 7வது சீசன் 13 வாரத்தை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
இந்த 7வது சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
கடந்த வாரம் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து இருவர் வெளியேறி இருந்தார்கள், ரவீனா மற்றும் நிக்சன். இதில் ரவீனா வெளியே வந்ததை தாண்டி நிக்சன் வெளியேறியது தான் மக்கள் சரியான முடிவு என கமெண்ட் செய்து வந்தார்கள்.
நிக்சன் பதிவு
முதலில் வினுஷா அடுத்து ஐஸ்வர்யா கடைசியாக பூர்ணிமா என பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் நிக்சன்.
இப்போது நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ள நிக்சன் தனது இன்ஸ்டாவில், இப்போதுதான் எல்லாவற்றையும் பார்த்தேன், எதிர்ப்பார்க்காத எல்லாத்தையும் எதிர்ல பாத்தது என்ன பீல்.
நடிகர் விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள் பட நடிகையை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
எவ்ளோ சப்போர்ட், எவ்ளோ லவ், இவ்ளோ பேருக்கு என்னை புடிச்சிருக்குன்னு உள்ள இருக்க வரைக்கும் எனக்கு தெரியல.
ஒருவேள தெரிஞ்சிருந்தா இன்னும் Effort போட்ருப்பனோ? ச்ச, அதெல்லாம் யோசிக்கிவே இல்ல, என்ன மன்னிச்சுடுங்க’ என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால் அவரின் பதிவை கண்ட ரசிகர்கள் சப்போர்ட்டா, லவ்வா அதெல்லாம் ஒன்றும் கிடையாது என இவரை பலர் திட்டி கமெண்ட் போட்டுள்ளனர்.