போதும் முடிச்சுக்கலாம், அநியாயத்திற்கு அநியாயம்- பிக்பாஸ் 7 புகழ் பிரதீப் ஆண்டனி டுவிட்
பிக்பாஸ் 7
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் படு பிரம்மாண்டமாக கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த சீசன் ஏகப்பட்ட மாற்றங்கள், அதிரடி திருப்பங்கள்.
இரண்டு வீடு என்று விளம்பரம் செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்குள் நிறைய விஷயங்கள் புதியதாக இருந்தது.
முதல் வாரமே எவிக்ஷன், அடுத்து டபுள் எவிக்ஷன், திடீரென ரெட் கார்ட்டு, மொத்தமாக உள்ளே வரப்பட்ட வைல்ட் கார்ட்டு போட்டியாளர்கள் என இந்த 7வது சீசன் முழுவதும் அதிரடியாகவே இருந்தது.
பிரதீப் டுவிட்
பிக்பாஸ் 7வது சீசனில் ரெட் கார்ட்டு கொடுக்கப்பட்டு பிரதிப் வெளியே அனுப்பப்பட்டாலும் மக்களால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நிகழ்ச்சியே முடியப்போகிறது ஆனால் அவருக்கு ஆதரவாக பலரும் டுவிட் செய்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் பிரதீப் தனது டுவிட்டரில், எனக்காக அழுது, போறவரவன்கிட்ட எல்லாம் சண்டை போட்டு, இன்றளவும் வீடியோஸ் எல்லாம் போட்டு ட்ரெண்ட் பண்ணிக்கிட்டு இருக்கிற என் அன்பு உள்ளங்களே மிகவும் நன்றி.
ஆனால் நான் சோகமா எல்லாம் இல்ல, நீங்களும் சோகமா இருக்காதீங்க, ஜாலி பண்ணலாம். வன்மம் போதும் முடிச்சுக்கலாம். அநியாயத்துக்கு அநியாயம் பண்றீங்க என்று தெரிவித்துள்ளார்.