பீஸ்ட் பட தயாரிப்பாளரை சந்தித்த தளபதி விஜய், எப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தெரியுமா?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடைபெற்று வருகிறது, இதில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தயாரிப்பாளரும் சன் பிக்சர்ஸின் நிறுவனருமான கலாநிதி மாறனை தளபதி விஜய் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் இந்த புகைப்படம் வேட்டைக்காரன் அல்லது சுறா திரைப்படத்தின் போது எடுக்கப்பட்டது போல் தான் உள்ளது.
