பீஸ்ட் திரைப்பட நடிகர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம், யார் யார் தெரியுமா?
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
பெரியளவில் எதிர்பார்க்கப்படும் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என சமீபத்தில் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே ரசிகர்கள் அனைவரும் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கள் பாடல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்த்தனர்.
ஆனால் தற்போது வரை அது குறித்த எந்தஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ், சுனில் ரெட்டி, ஷிவா அரவிந்த் உள்ளிட்டோர் எடுத்த கொண்ட புகைப்படம்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே தளபதி விஜயுடன் இசைக்கருவி வசிப்பது போல எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.