பீஸ்ட் பட நடிகைகள் ஒன்றாக எடுத்துக்கொண்ட செல்பி, பூஜா ஹெக்டே பிறந்தநாள் ஸ்பெஷல்..
தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சென்னையில் படப்பிடிப்பு பணிகள் முடித்த பின் பீஸ்ட் படக்குழு சமீபத்தில் டெல்லி சென்றது. அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு இயக்கத்தில் அங்கு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இன்று நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் என்பதால் பீஸ்ட் படத்தின் போஸ்டர் வெளியாகியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் பட ஷூட்டிங்கில் நடிகை அபர்ணா தாஸ் நடிகை பூஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.