வடையெல்லாம் சுடல, இது தான் நிஜமான பீஸ்ட் காலெக்ஷன் ! முக்கிய சினிமா பிரமுகரின் பதிவு..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.
இதனால் வரும் நாட்களில் பீஸ்ட் படத்தின் வசூல் பெரியளவில் பாதிப்படையும் என கூறப்படுகிறது, அதுமட்டுமின்றி KGF 2 திரைப்படமும் இங்கு பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது முக்கிய சினிமா பிரமுகரான ஜி. தனஞ்செயன் பீஸ்ட் படத்தின் வசூல் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் தான் பேட்டியளித்தது போல பீஸ்ட் படம் முதல் நாள் காலெக்ஷனில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது.
இதற்கு விஜய்யின் புகழே காரணம், தயாரிப்பாளரே விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ காலெக்ஷன் விவரத்தை வெளியிடுவார். மேலும் "வடையெல்லாம் சுடலை தம்பிகளா. நிஜம்" எனவும் பதிவிட்டுள்ளார்.
#Beast Received Box Office collection numbers of TN. My forecast in interviews came true. Film broke all records for 1st day.
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) April 14, 2022
Power of #ThalapathyVijay & his massive reach. Producer will reveal actual nos.#BeastAlltimeRecordOpening
PS: வடையெல்லாம் சுடலை தம்பிகளா. நிஜம்?? pic.twitter.com/MsgsBlJfnS