பீஸ்ட் படத்தில் இது போன்ற காட்சிகளை தான் நடிகை பூஜா எதிர்பார்த்து காத்துள்ளாராம் !
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட்.
இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார், முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூஜை நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
இப்படத்தை படத்தை தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே தொடர்ந்து தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பீஸ்ட் குறித்து சமீபத்தில் பூஜா பேட்டியளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது, "பீஸ்ட் படத்தைப் பொறுத்தவரை, என்னுடைய இயக்குநர் நெல்சன் எனக்கு சில ஆக்ஷன் காட்சிகளைக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.
நான் அதை முயற்சி செய்ய விரும்புகிறேன். விஜய் மிகவும் கூலான ஒரு மனிதர், அது எனக்குள்ளும் எதிரொலிக்கிறது" என பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.