வலிமை வசூல் சாதனையை முறியடிக்க வெறும் மூன்றே நாட்களை எடுத்துக்கொண்ட பீஸ்ட் !
விமர்சனங்களுக்கு உள்ளான பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
கடந்த 13 ஆம் தேதி உலகமுழுவதும் வெளியான பீஸ்ட் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்று வருகிறது.
மேலும் பீஸ்ட் திரைப்படம் மற்ற இடங்களில் வசூலில் சொதப்பினாலும் தமிழ் நாட்டில் இதுவரை இருந்த சாதனைகளையும் முறியடித்து No.1 திரைப்படமாக மாறியுள்ளது.
வலிமையை முறியடித்த பீஸ்ட்
இந்நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படம் கர்நாடகாவில் இதுவரை ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வலிமை திரைப்படம் ஒட்டுமொத்தமாக அங்கு ரூ 9.7 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. ஆனால் பீஸ்ட் திரைப்படம் மூன்றே நாளில் வலிமை பட வசூலை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சொந்த ஊரில் புதிய வீடு கட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்- வெளிவந்த கலக்கல் புகைப்படங்கள்