சென்னையில் நல்ல வசூல் செய்த பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த பீஸ்ட் திரைப்படம் அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது, இதனால் இப்படம் பெரியளவில் வசூல் சாதனைகளை ஏதும் நிகழ்த்தவில்லை.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் வெளிமாநிலங்களில் படுதோல்வி அடைந்தாலும், தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வசூலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், சென்னையில் மட்டும் பீஸ்ட் திரைப்படம் ரூ 10.02 கோடிகள் வசூல் செய்துள்ளதாம்.
கடைசியாக வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும் கூட ரூ 11.63 கோடிகள் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கிண்டலுக்கு உள்ளான விஜய் ! கடுப்பான ரசிகர்கள்..