பீஸ்ட் படத்தில் எடுக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த காட்சிகள், முக்கிய பிரபலம் பகிர்ந்த புகைப்படம்..
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர், இளைய தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் Beast என்னும் புதிய படம் உருவாகி வருகிறது.
டாக்டர் பட மாஸ் வெற்றியின் மூலம் தனக்கென தனி இடத்தை தென்னிந்திய சினிமாவில் பதிவு செய்துள்ளார் இயக்குனர் நெல்சன்.
முதல் படமான டாக்டரே 100 கோடி வசூல் சாதனை படைத்ததை அடுத்து இவரும் விஜய் கூட்டணியில் வரவிருக்கும் Beast படத்திற்கு ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த படத்தில் நடிகர் விஜய்யிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டெ நடிக்கவுள்ளார்.
இதனிடையியே தான் Beast படத்தின் ஒளிப்பதிவாளரான மனோஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

