வலிமை வசூலை அடித்து நொறுக்கிய பீஸ்ட்.. ஆல் டைம் ரெகார்ட்
விஜய் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல ஆண்டுகள் கழித்து விஜய்க்கு இப்படியொரு தோல்வி என திரை வட்டாரங்களில் கூறுகின்றன.
இந்நிலையில், பீஸ்ட் படத்தின் முதல் நாள் தமிழ்நாடு வசூல் குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் இதுவரை வெளிவந்த அனைத்து படங்களின் வசூலையும் அடித்து நொறுக்கி, ஆல் டைம் ரெகார்ட் வசூலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சர்கார் படத்தின் சாதனையை ரூ. 33 கோடி வசூல் செய்து முறியடித்து முதலிடத்தை வலிமை பிடித்துள்ளது.
ஆனால், சிலரால் வலிமை படம் தமிழகத்தில் ரூ. 37 கோடி வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.