ட்ரோல்கள் பற்றி 'நெல்சன்' முதல் முறையாக சொன்ன பதில்
நயன்தாராவின் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர் ஆகிய படங்கள் ஹிட் ஆன பிறகு இயக்குனர் நெல்சனுக்கு தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு பீஸ்ட் படம் மூலமாக கிடைத்தது.
இருப்பினும் ஏப்ரல் 13ம் தேதி படம் ரிலீஸ் ஆன பிறகு நெல்சன் அதிகம் ட்ரோல்களை தான் சந்தித்து வருகிறார். படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறாத நிலையில் ட்ரோல்கள் அதிகம் வந்துகொணிடிருக்கிறது.
சமீபத்தில் ரிலீஸ் ஆன விக்ரம் படம் ஹிட் ஆனது, அதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜை பாராட்டியவர்கள் ஒருபக்கம் என்றால் நெல்சனை அவருடன் ஒப்பிட்டு மோசமாக ட்ரோல் செய்த்தவர்கள் தான் அதிகம்.
நெல்சன் பதில்
இந்நிலையில் நெல்சன் சமீபத்தில் ஒரு விருது விழாவுக்கு சென்று இருக்கிறார். அப்போது அவரை மேடைக்கு அழைத்து டான்ஸ் ஆட சொன்னார் பூஜா ஹெக்டே. அதற்க்கு நெல்சன் முடியாது என மறுத்துவிட்டார்.
"நான் ஆல்ரெடி மாட்டிட்டு இருக்கேன், சைலண்டாக கீழே சென்று உட்கார்ந்துகொள்கிறேன்" என கூறினார் நெல்சன்.
நெட்டிசன்கள் மற்றும் மீம் கிரியேட்டர்களிடம் சிக்கிக்கொண்டு தினம்தோறும் ட்ரோல்களை சந்திப்பது பற்றித்தான் நெல்சன் இப்படி கூறி இருக்கிறார்.
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri