குவைத்தை தொடர்ந்து இன்னொரு முக்கிய இடத்திலும் பீஸ்ட் படத்திற்கு தடையா?- ரசிகர்கள் ஷாக்
பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. நெல்சன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கான டிரைலர் அண்மையில் தான் வெனியாகி இருந்தது.
பீஸ்ட் ரிலீஸில் உள்ள பிரச்சனை
விஜய்யின் பீஸ்ட் ரிலீஸ் நேரத்தில் படு ஹிட்டான KGF படத்தின் இரண்டாம் பாகம் வர இருக்கிறது. இதனால் திரையரங்குகள் கிடைப்பதில் பெரும் போராட்டமாக உள்ளது வலிமை பட ரிலீஸை விட விஜய்யின் பீஸ்ட் படம் திரையிடப்படும் திரையரங்குகள் குறைவாக தான் உள்ளன.
எனவே வசூல் போட்டியில் அடிவிழும் என்ற பயத்தில் ரசிகர்கள் உள்ளார்கள்.
இந்த நேரத்தில் படத்தில் சில மோசமான காட்சிகள் இருக்கிறது எனவே படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என குவைத் அரசாங்கம் கூறியிருக்கிறது, அந்த பயத்தில் ரசிகர்கள் உள்ளார்கள்.
குவைத் தொடர்ந்து மலேசியாவிலும் இதே பிரச்சனை வந்துள்ளது. ஏற்கெனவே சில பிரச்சனைகள் மலேசியாவில் ஓடிக் கொண்டிருக்க தற்போது இப்படத்தில் தீவிர வாதிகள் போன்ற காட்சிகள் இருப்பதால் மலேசியா அரசு குவைத் எடுத்துள்ள முடிவு போல இங்கேயும் போடலாமா என யோசித்து வருகிறார்களாம்.
படம் அங்கு சமூகமாக வெளியாகுமா அல்லது நிறைய கட்டுப்பாடுகளுடன் ஒளிபரப்பாக இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதனால் படக்குழு என்ன செய்யப்போகிறது என்று சோகத்தில் உள்ளார்கள் ரசிகர்கள்.
பீஸ்ட் படத்திற்கு இங்கும் தடையா?- வீடியோவுடன் இதோ