2022ன் படி வசூலில் விஜய்யின் பீஸ்ட் செய்துள்ள சாதனைகள் என்னென்ன- முழு விவரம்
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 16 நாட்கள் முடிவடைந்துவிட்டது, படத்தின் காட்சிகளும் குறைந்து கொண்டே வருகிறது. 25 நாட்கள் கூட முழுவதும் பீஸ்ட் முடிந்துவிடும் என்பது போல் தெரிகிறது.
பீஸ்ட் கதைப்படி மக்களை கவரவில்லை என்றாலும் விஜய் என்ற பெயருக்காகவே படம் இத்தனை நாள் ஓடி இருக்கிறது, இதுதான் உண்மை. ஆனால் படத்திற்கு தயாரிப்பு குழு போட்ட பணத்தை கண்டிப்பாக எடுத்திருப்பார்கள்.
நஷ்டம் என்று சொல்லபடி படம் அவ்வளவு மோசமாக ஒன்றும் வசூலிக்கவில்லை.
படத்தின் சாதனை
பீஸ்ட் கொஞ்சம் சறுக்கிய நேரத்தில் யஷ் நடித்த Kgf 2 படம் நல்ல வசூல் வேட்டை நடத்திவிட்டது. இப்போது அப்படம் ரூ. 1000 கோடியை எட்டி வருகிறது.
விஜய்யின் பீஸ்ட் படமும் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் சில சாதனைகளை செய்துள்ளது. அதாவது 2022ல் இதுவரை வெளியான படங்களின் சாதனையை முறியடித்து விஜய்யின் பீஸ்ட் படம் சில விஷயங்களை செய்துள்ளது.
சென்னை, தமிழ்நாடு, உலகம் முழுவதும் என 2022ல் வெளியான படங்களில் எல்லா இடங்களிலும் அதிகம் வசூலித்து ஹிட் படமாக அமைந்துள்ளது.
கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சமந்தா- யாருடன் பாருங்க