பீஸ்ட் படத்தில் விஜய்க்காக சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் ஆரம்பமே இதுதானா?- வெளிவந்த தகவல்
இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் முதன்முதலாக நடிக்கும் திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெட்ச் நடித்து வருகிறார்.
100வது நாள் படப்பிடிப்பு ஸ்பெஷலாக படக்குழு ஒரு சூப்பர் புகைப்படம் ஒன்று வெளியிட்டார்கள் அதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதுகிறார் என தகவல் வந்தது.
தற்போது வந்த தகவல் என்னவென்றால் சிவகார்த்திகேயன் பீஸ்ட் படத்திற்காக எழுதியுள்ள பாடல் 90ஸ் கிட்ஸ் என தொடங்கும் பாடல் வரிகளோடு அமைந்துள்ளது என்கின்றனர். அப்படி வந்தால் கொண்டாட்டம் தான், உண்மையில் அவர் எப்படிபட்ட பாடல் எழுதியிருக்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சிவகார்த்திகேயன் இதற்கு முன் எனக்கு கல்யாண வயசு தான் என்ற பாடலையும் ஓ பேபி பாடலையும் எழுதி அசத்தியிருக்கிறார்.
பீஸ்ட் பட பாடல் மூலம் விஜய் ரசிகர்களை எப்படி கவர்கிறார் என்பதை பார்ப்போம்.