முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலிக்குமா பீஸ்ட்! தளபதி கெரியரில் புது உச்சம்
பீஸ்ட் படத்தின் ரிலீசுக்காக தான் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் தற்போது காத்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனமும் படத்தை விளம்பரப்படுத்த பல புதிய ப்ரோமோக்களை தினமும் வெளியிட்டு வருகிறது. அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டி வருகிறது.
முன்பதிவு
படத்தின் ரிசர்வேஷன் ஏற்கனவே தொடங்கப்பட்டு பல முன்னணி தியேட்டர்களில் முடிந்துவிட்டது. சென்னையில் பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நாள் காட்சிகள் அனைத்தும் ஹவுஸ் ஃபுல் ஆகி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி வசூலிக்கும் இந்த படம் என்கிற கணிப்பு தொடங்கி இருக்கிறது.

இத்தனை கோடியா?
முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விலை வழக்கமானதை விட அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இணையதள புக்கிங்கில் கூட 200 தொடங்கி 700 ருபாய் வரை வசூலிக்கப்பட்டு இருக்கிறது.
அதனால் முதல் நாளில் தமிழ்நாட்டில் 40 கோடி ருபாய் வரை பீஸ்ட் வசூலிக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் மொத்த வசூலில் தளபதி கெரியரில் புதிய உச்சத்தை பீஸ்ட் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக்கானின் சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா, கேட்டால் தலையே சுற்றிவிடும்