விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு கூட்டம் இல்லை, 2 நாளில் தூக்கிய திரையரங்கம்- கெத்து காட்டும் KGF2
தமிழ்நாட்டில் எப்போதும் விஜய் படத்திடன் வேறு நடிகரின் திரைப்படம் வந்தால் அப்படத்திற்கு எப்போதுமே சாதாரண வரவேற்பு கிடைக்கும். ஆனால் தற்போதைய நிலவரப்படி கதை அப்படியே மாறியுள்ளது.
அதாவது விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கு சரியான வரவேற்பு இல்லையாம், கூட்டம் இல்லை என்பதால் பல திரையரங்குகள் படத்தை தூக்கிவிட்டார்கள்.
அதற்கு பதில் யஷ் நடித்துள்ள KGF 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம். ஏற்கெனவே ரோகினி திரையரங்கில் முதல் திரையில் பீஸ்ட் எடுத்துவிட்டு KGF2 ஆரம்பித்துவிட்டார்கள்.
அதேபோல் இப்போது சென்னையில் உள்ள வடுகநாதன் திரையரங்கிலும் பீஸ்ட் படத்தை எடுத்துவிட்டு KGF 2 திரைப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளார்களாம். அவர்களே இதனை டுவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளனர்,
Due To Ticket Pressure Of #KGFChapter2 We Removed BEAST 5Am Shows and Added KGF2 5sm Shows in Our VadugaNathan Cinemas on Sat, Sunday.
— Vaduganathan Cinemas (@Vaduganathan4K) April 15, 2022
BEAST will Screening Morning 8.30am in our Lena Cinemas
Book Ur Ticket Now in https://t.co/5ddiOnU2E3 pic.twitter.com/9uKItTApRd