பீஸ்ட் படத்தின் கதாநாயகி நடிகை பூஜா ஹெக்டே இந்த தமிழ் நடிகரின் Fan-ஆ, யார் தெரியுமா ?
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியாகியுள்ள அரபிக் குத்து பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று பெரியளவில் ஹிட்டாகியுள்ளது.
அதன்படி அப்பாடல் வெறும் 12 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளை குவித்து சாதனை படைத்துள்ளது.
இதனிடையே இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை பூஜா ஹெக்டே இவர் தமிழில் இதற்கு முன் முகமூடி திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படத்தை தொடர்ந்து பல வருடங்களுக்கு பிறகு தமிழ் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது பூஜா ஹெக்டே கடந்த 2013 ஆம் ஆண்டு அவரின் ட்விட்டரில் பதிவிட ட்வீட் ஒன்று ரசிகர்களிடையே பரவி வருகிறது.
ஆம் அதில் அவர் நடிகர் கமல் குறித்தும் அவரின் விஸ்வரூபம் திரைப்படம் குறித்தும் தான் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தான் தற்போது கமலின் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
@hegdepooja She is our girl. Support her in all her endeavours #nammavar #Vikram #kamalhassan @ikamalhaasan @RKFI @maiamofficial
— கடவுள் கமல்! (@ulaganayagan1) February 27, 2022
?????????? pic.twitter.com/VVTE3ow3Rm