பீஸ்ட் படத்தில் இடம்பெறும் மால் செட்டிற்கு பின்னால் இப்படியொரு விஷயமா?- பிரபலமே கூறிய தகவல்
நெல்சன் திலீப்குமார் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
அவர் இயக்கிய 3வது திரைப்படம் தான் பீஸ்ட், இதில் விஜய் மற்றும் பூஜா ஹெட்ச் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள்.
படத்தின் மால் செட் பற்றிய தகவல்
இப்பட டிரைலர் அண்மையில் வெளியாகி இருந்தது, அதில் விஜய்யை தாண்டி மக்களை அதிகம் ஈர்த்தது மால் செட் தான். மால் செட் உருவானதற்கு பின்னால் இருக்கும் விஷயங்களை முதன்முறையாக ஒரு பேட்டியில் கூறியுளளார் கலை இயக்குனர் கிரண்.
அதில் அவர், ஒரு மாலுக்கு நேரிலேயே சென்று படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம் ஆனால் கொரோனாவால் முடியவில்லை. பின் ஜார்ஜியா சென்று எடுக்கலாம் என்று பார்த்தால் நம்ம ஊர் ஆட்களை அங்கே கொண்டு போறதில் குழப்பம், பட்ஜெட் அதிகமாகும்.
பிறகு தான் மொத்த மால்லயும் செட் போட முடிவு செய்து முதலில் ஒரு ப்ளோர் மட்டும் செட் போட பிளான் செய்து பின் மொத்த மால்லும் செட் போட்டுட்டோம். 60 அடிக்கு மேல செட் போடனும்னா உள்புறம் வெளியே தனிதனியாக போடுவோம்.
ஆனால் இந்த செட்டை மொத்தமாக போட்டோம். 5 மாதத்தில் மால் செட் போட பிளான் செய்தோம், கொரோனா பிரச்சனை 3 மாதத்தில் இந்த செட் போட்டு முடிச்சோம் என கூறியுள்ளார்.

முன்னாள் மனைவி மீது புகார் அளித்த இசையமைப்பாளர் டி,இமான்- என்ன விஷயம் தெரியுமா?