பீஸ்ட் படத்தில் இப்படி பாடல் அமைந்துள்ளதா! முதல்முறையாக அப்டேட் கொடுத்த நெல்சன்..
தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சென்னையில் படப்பிடிப்பு பணிகள் முடித்த பின் பீஸ்ட் படக்குழு சமீபத்தில் டெல்லி சென்றது. அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு இயக்கத்தில் அங்கு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் நேற்று நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் என்பதால் பீஸ்ட் படத்தின் போஸ்டர் வெளியாகியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இயக்குனர் நெல்சன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பீஸ்ட் குறித்து பேசியுள்ளார். அதில் பீஸ்ட் படத்தில் மரண குத்து சாங் இருக்கும் என கூறியுள்ளார். மேலும் இதுவரை நீங்க பார்க்காத தளபதி என்ட்ரி இதில் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.