பீஸ்ட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக முக்கிய இடத்திற்கு செல்லவுள்ள படக்குழு !
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட்.
மேலும் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான தோனி கலந்து கொண்டார். அப்போது விஜய் மற்றும் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலானது.
இதனிடையே பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் முடித்த பூஜா ஹெக்டே விமான நிலையத்தில் அவரிடம் விஜய்யுடன் பணியாற்றிய அனுப்பவம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் "விஜய்யுடன் பணியாற்றியது மிகவும் சந்தோசமாக உள்ளது" என கூறிவிட்டு சென்றார்.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்கு செப்டம்பர் 1 முதல் 20 ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.