பீஸ்ட் படத்துடன் ஏப்ரலில் மோதும் மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம், எந்த திரைப்படம் தெரியுமா?
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். பிரமாண்டமாக உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் சிங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி மாஸ் போஸ்டருடன் பீஸ்ட் திரைப்படம் அடுத்த ஏப்ரலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அதே ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வருடம் இரண்டு மிக பெரிய திரைப்படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது.