OTT தளத்தில் இப்படியொரு சாதனையை எந்த தமிழ் நடிகரும் செய்ததில்லை ! மாஸ்க்காட்டும் பீஸ்ட்..
பீஸ்ட் படத்திற்கு கிடைத்த பெரிய வரவேற்பு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமுழுவதும் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியானது பீஸ்ட்.
மேலும் பீஸ்ட் வெளியானதில் இருந்து அனைவரிடமும் கடுமையான விமர்சனங்களையே பெற்று வந்தது, ஏன் விஜய்யின் ரசிகர்களுக்கு கூட பீஸ்ட் படம் பிடிக்காமல் போனது.
அப்படி மோசமான விமர்சனங்களை பெற்ற பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் நல்ல வசூலை ஈட்டியது. அதன்படி தமிழகத்தில் மட்டும் பீஸ்ட் திரைப்படம் ரூ.60 கோடி ஷேர் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதனிடையே பீஸ்ட் திரைப்படத்தை பிரபல OTT தளமான Netflix-ல் வெளியாகியுள்ளது, இதனால் பலதரப்பு ரசிகர்களும் படத்தை பார்த்து வருவதால் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதன்படி தற்போது Netflix இந்த வாரத்தின் டாப் திரைப்படங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் RAW (பீஸ்ட் ஹிந்தி) 5 இடத்திலும், பீஸ்ட் (தமிழ்) 7-வது இடத்தையும் பிடித்துள்ளது.

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்..