நெகடிவ் விமர்சத்தை தாண்டி பீஸ்ட் வசூலுக்கு வந்திருக்கும் மேலுமொரு பெரிய சிக்கல்
பீஸ்ட் படத்தை பற்றி தான் தற்போது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விஜய் ரசிகர்களே படம் தங்களுக்கு பிடிக்கவில்லை என வெளிப்படையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
படத்தின் நெகடிவ் விமர்சனம் வசூலை வரும் நாட்களில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு புது பிரச்சனை வந்திருக்கிறது.
பீஸ்ட் படத்தினை தமிழ்ராக்கர்ஸ் தளம் லீக் செய்து இருக்கிறது. இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. சினிமா துறைக்கு பெரிய சிக்கலாக இருந்து வரும் பைரஸிக்கு தற்போது பீஸ்ட் படமும் சிக்கி இருக்கிறது.
பைரசியில் படம் பார்க்காதீர்கள், தியேட்டரில் படம் பாருங்கள் என சினிமா துறையினர் மட்டுமின்றி, தற்போது விஜய் ரசிகர்களும் கேட்டு வருகின்றனர்.