இணையத்தில் லீக்கான Beast பட காட்சியின் புகைப்படம் ! எப்படி இருந்தது தெரியுமா?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் பெரிய வரவேற்பை பெற்று 100 மில்லியனுக்கு அதிகமாக யூடியூப்பில் பார்வைகளை குவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் பீஸ்ட் பட காட்சியின் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அந்த புகைப்படம் டப்பிங்கின் போது எடுக்கப்பட்டது போல தான் உள்ளது.
மேலும் ரசிகர்களிடையே பரவி வரும் அந்த புகைப்படத்தில் விஜய் போன்னில் பேசிக்கொண்டு இருக்கிறார். அவரை சுற்றி குதிரைகள் உள்ளன, அதை பார்க்கும் போது ஜார்ஜியா லொகேஷன் போல் தான் உள்ளது.