விஜய்யால் மட்டும் தான் பீஸ்ட் படம் பண்ண முடியும்.. இயக்குனர் நெல்சன் திலிப்குமார் அதிரடி
தமிழ் சினிமாவில் எதிர்பார்க்குரிய படங்களில் ஒன்று, தளபதி விஜய்யின் பீஸ்ட்.
நெல்சன் திலிப்குமார் இயக்கிவரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன் இப்படத்தின் மூலம் விஜய்யுடன் முதல் முறையாக இணைகிறார்கள்.
விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் சமீபத்தில் பீஸ்ட் படம் குறித்து பேசியுள்ளார்.
இதில் ' பீஸ்ட் படம் விஜய் சாருக்காக தான் பண்ணினது. அந்த ஒரு இடத்தில் இருப்பவர் தான் இந்த மாதிரி படத்தை பண்ண முடியும். ஆனால், படத்தில் விஜய்க்காக எதுவும் மாற்றவில்லை. ' என்று கூறியுள்ளார்.