மீண்டும் பீஸ்ட் படப்பிடிப்பில் இணையவிருக்கும் பிரபலம் - பீஸ்ட் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சாக சென்னையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சில காட்சிகளில் நடித்து சென்ற நடிகை பூஜா ஹெக்டே, இன்னும் சில நாட்களில் பீஸ்ட் படப்பிடிப்பிற்கு திரும்பவிருக்கிறாராம்.
இந்நிலையில் சென்னையில் படப்பிடிப்பை முடித்த கையுடன், படக்குழுவினர் ரஷ்யா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடக்கவிருப்பதாக திரை வட்டாரங்களில் கூறப்படுகிறது.