பீஸ்ட் படத்தின் மூன்று நாள் தமிழ்நாடு காலெக்ஷன் ! கடும் சரிவை சந்தித்த விஜய்..
பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
கடந்த 13 ஆம் தேதி உலகமுழுவதும் வெளியான பீஸ்ட் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்று வருகிறது.
மேலும் பீஸ்ட் திரைப்படம் மற்ற இடங்களில் வசூலில் சொதப்பினாலும் தமிழ் நாட்டில் இதுவரை இருந்த சாதனைகளையும் முறியடித்து No.1 திரைப்படமாக மாறியுள்ளது.
மூன்றாவது நாள் வசூல்
ஆனால் விமர்சனங்கள் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் கடும் சரிவை சந்தித்துள்ளது.
அதன்படி தற்போது பீஸ்ட் படத்தின் மூன்றாவது நாள் தமிழ்நாடு வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. பீஸ்ட் மூன்றாவது நாளில் ரூ.15 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரிய வரவேற்பை பெற்ற பீஸ்ட் தற்போது கடும் சரிவை சந்தித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
