மூன்று முக்கிய இடங்களில் தோல்வியை நோக்கி பீஸ்ட்: விஜய் கெரியரில் பெரிய அடி
விஜய்யின் பீஸ்ட் படம் மீது எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்தது என சொல்லி தெரியவேண்டியது இல்லை. ஆனால் அந்த படம் வெளியான பிறகு ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
படத்தில் சுவாரஸ்யம் குறைவு, லாஜிக் மீறல்கள் என பல இருந்ததால் தற்போது மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் குடும்ப ரசிகர்கள் படத்தை தற்போது தியேட்டரில் பார்த்து வருகிறார்கள் என கூறப்படுகிறது.
#BeastInRamCinemas flooded with full of Families !!
— Ram Muthuram Cinemas (@RamCinemas) April 15, 2022
Nothing Can Stop #Thalapathy 's Box-office rage ?#Beast Blockbuster Hit ? pic.twitter.com/UqYzgBDKrg
மூன்று இடங்களில் பெரிய அடி
இந்நிலையில் தற்போது கர்நாடகா, கேரளா, ஆந்திரா+தெலுங்கானா ஆகிய இடங்களில் பீஸ்ட் பட வசூலுக்கு பெரிய அடி என சொல்லப்படுகிறது. கேஜிஎப் 2 போட்டிக்கு வந்ததும் இதற்கு முக்கிய காரணம்.
விஜய் ரசிகர்கள் அதிகம் இருக்கும் கேரளாவிலும் பீஸ்ட் படம் நஷ்டத்தை சந்திக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் தகவல் வருகிறது. ஆந்திரா, கர்நாடகாவில் பிரேக் இவன் தொகையை பீஸ்ட் தொடுவதே கஷ்டம் என்றும் சொல்லப்படுகிறது.
