பீஸ்ட் பட இயக்குனருடன் தொகுப்பாளினி டிடி மற்றும் விஜய் டிவி நட்சத்திரங்கள்!
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவர் நெல்சன் திலீப்குமார்.
இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
அந்த வகையில் கடைசியாக இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் புரிந்து சாதனை படைத்துள்ளது.
இதனிடையே தற்போது இவர் தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவரின் முந்தைய படங்கள் ரசிகர்கள் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ள நிலையில் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் நெல்சனுடன் தொகுப்பாளினி DD, சாண்டி, அசார் என முக்கிய விஜய் டிவி நட்சத்திரங்கள் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
இயக்குனர் நெல்சன் திரையுலகில் அறிமுகமாகும் முன்பு விஜய் டிவி-ல் ஜோடி நோ 1, பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.