பீஸ்ட் படத்தின் அடுத்தடுத்து மூன்று அப்டேட்ஸ், வெளியான சூப்பர் தகவல்..
தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் படப்பிடிப்பு பணிகள் முடித்த பின் பீஸ்ட் படக்குழு சமீபத்தில் டெல்லி சென்றது.
அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு இயக்கத்தில் அங்கு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இருந்து அடுத்தடுத்து மூன்று அப்டேட்கள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அக்டோபர் 13 ஆம் தேதி நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் என்பதால் அன்று ஒரு போஸ்டர் வெளியாகும். அதையடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை நாட்களான அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் பீஸ்ட் படத்தின் இரண்டு முக்கியமான அப்டேட்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.