எதிர்பார்த்ததை விட சீக்கிரமே ஓடிடியில் வெளியாகும் பீஸ்ட்! தேதி இதுவா?
பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ் ஆனது. நெகடிவ் விமர்சனங்கள் அதிகம் வந்தாலும் முதல் நாளில் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை.
குறையும் வசூல்
இரண்டாம் நாளில் (ஏப்ரல் 14) கேஜிஎப் 2 படம் ரிலீஸ் ஆனதால் பீஸ்ட் வசூலுக்கு பாதிப்பு தொடங்கியது. மேலும் நெகட்டிவ் விமர்சனங்கள் காரணாமாக கேஜிஎப் 2 படத்திற்கு தியேட்டர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கிவிட்டது.
இதனால் பீஸ்ட் வசூல் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே இருக்கிறது. விரைவில் மொத்த வசூல் 200 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஓடிடி ரிலீஸ் எப்போது
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மே 11ம் தேதி பீஸ்ட் சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளிவரும் என தெரிகிறது.
இருப்பினும் இது இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்படாத தேதி தான்.
மேலும் கேஜிஎப் 2 ஓடிடியில் வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

பீஸ்ட் சரியில்லாததற்கு அந்த விஷயம் மட்டுமே காரணம்- இது சரியில்லை, எஸ்.ஏ.சி ஓபன் டாக்