விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பீஸ்ட் காலெக்ஷனை அறிவித்த தயாரிப்பு நிறுவனம் !
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் கடந்த 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட்.
இப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்று வருகிறது.
அனைவரும் எதிர்பார்த்து இருந்த விஜய் பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற தொடங்கியதில் இருந்து படத்தின் வசூல் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தமிழ்நாட்டில் அதிக வசூலை குவித்து பாக்ஸ் ஆபீஸில் No.1 திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது பீஸ்ட்.
இந்நிலையில் தற்போது இப்படத்தை வெளியிட்டுள்ள நிறுவனங்களில் ஒன்றான ஐங்கரன் இன்டர்நேஷனல் பீஸ்ட் படத்தின் USA, ஆஸ்திரேலியா, UK, ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளின் காலெக்ஷன் நிலவரத்தை வெளியிட்டுள்ளது.



