ரஜினி, அஜித் எல்லோரையும் ஓரங்கட்டிய பீஸ்ட்! சென்னையின் முக்கிய தியேட்டரில் செய்த சாதனை
பீஸ்ட் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது. பிஸ்டுக்கு கலவையான விமர்சனங்கள் வந்திருப்பது வசூலை வரும் நாட்களில் அதிகமாக பாதிக்கும் என தெரிகிறது.
பெரிய எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு சென்று விஜய் ரசிகர்கள் வெளியில் வரும் போது சொல்லும் விமர்சனம் அவர்கள் ஏமாற்றத்தில் இருப்பதை தான் வெளிப்படையாக காட்டுகிறது.
இப்படி தொடர்ந்து வரும் நெகட்டிவ் விமர்சனங்களை எல்லாம் தாண்டி முதல் நாளில் சென்னை ரோகிணி தியேட்டரில் சில சாதனைகள் செய்திருக்கிறது. அதை தியேட்டர் உரிமையாளர் அறிவித்து இருக்கிறார்.
முதல் நாளில் அதிகம் பேர் படம் பார்த்த சாதனை, முதல் நாளில் அதிகபட்ச வசூல், அட்வான்ஸ் புக்கிங்கில் முதலிடம் என மூன்று சாதனைகளை பீஸ்ட் தற்போது வரை செய்திருக்கிறது என அவர் கூறி இருக்கிறார்.
#Beast records so far at #FansFortRohini :
— Nikilesh Surya ?? (@NikileshSurya) April 13, 2022
1. All time Highest Day 1 footfalls
2. All time Highest Day 1 BO Grosser
3. All time Highest Advance booking by gross and footfalls