பீஸ்ட் திரைப்படத்தில் செல்வராகவன் வில்லன் கிடையாதா! இயக்குனர் நெல்சன் வைத்த டிவிஸ்ட்..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்.
பிரமாண்டமாக உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்தது, தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பீஸ்ட் படத்தின் சிங்கள் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போதுவரை இது குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.
இதனிடையே இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவருக்கு ஜாலியான அரசியல்வாதி கேரக்டரை கொடுத்துள்ளார் இயக்குனர் நெல்சன் திலிப் குமார்.