பீஸ்ட் ஷூட்டிங்கில் நடிகர் சிவகார்த்திகேயனா ! புகைப்படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்கள்..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட்.
இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று முடியும் நிலையில் உள்ளது, அதன் அப்டேட்டுகளும் இணையத்தில் வெளியாகி வருகிறது.
இதனிடையே இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதியுள்ளதாகவும் அதனை தளபதி விஜய் பாடியுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது சென்னை கோகுலம் ஸ்டுடியோஸ்-ல் பீஸ்ட் மற்றும் டான் பட ஷூட்டிங் நடைபெற்றுள்ளது, அப்போது தளபதி விஜய்யை சிவகார்த்திகேயன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் வெளியாகி குஷியாகியுள்ள ரசிகர்கள், அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் இதற்கு முன் சூர்யா மற்றும் விஜய் ஷூட்டிங்கில் சந்தித்து கொண்டு பேசியதாக தகவல்கள் பரவின.
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan