பீஸ்ட் ஷூட்டிங்கில் தளபதி விஜய் செய்த விஷயம்! இதனால் தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாம்..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட்.
இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று முடியும் நிலையில் உள்ளது, அதன் அப்டேட்டுகளும் இணையத்தில் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் இன்று நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் தனது படப்பிடிப்புகள் முடிவடைந்ததாக கூறும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் நெல்சன் பீஸ்ட் பட 100 நாள் ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார், அதில் தளபதி விஜய்யுடன் அனைத்து நட்சத்திரங்களும் இசையமைத்த படி நின்று கொண்டு இருப்பார்கள்.
மேலும் தற்போது இது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படபிடிப்பின் இடைவெளியில் தளபதி விஜய் Shooting Location -ல் இருந்த இசைகருவிகளை எதார்த்தமாம உட்கார்த்து வாசிக்க துவங்கினாராம். இதை பார்த்த VTV கணேஷ் தொடர்ந்து சாக்சபோன் வாசிக்கும் படி கூறியிருக்கிறார்.
அப்படியே இயக்குனர் நெல்சன்னும் விஜய்யுடன் இனைத்து கொண்டாராம், இதை அங்கு உள்ள Photographer Maneksha தனது 'Camera' -வில் விழா கோலமாக Click செய்து இருக்கிறார்.
அப்போது நெல்சன் இதைய ஏன் நூறாவது நாள் கொண்டாடப் புகைப்படங்களாக வெளியிடக்கூடாது என நெல்சன் கூற செட்டில் இருந்த அனைவரும் விஜய்யுடன் நின்று குருப்பாகக போட்டோ எடுத்து உள்ளனர்" என தகவல் வெளியாகியுள்ளது.