விஜய் டிவி மீது செம கோபத்தில் தளபதி ரசிகர்கள்! காரணம் இதுதான்
தற்போது சின்னத்திரையில் முன்னணி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி. அந்த சேனல் மீது விஜய் ரசிகர்கள் தற்போது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
அதற்கு காரணம் அவர்கள் பீஸ்ட் படத்தினை ட்ரோல் செய்யும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தி இருப்பது தான். விஜய் போல காமெடியன் ராமர் தான் அந்த நிகழ்ச்சியில் நடித்து இருக்கிறார்.
நாளை தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக மாலை 4.30 மணிக்கு இந்த ஷோவை ஒளிபரப்ப இருகின்றனர். ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் தளபதி விஜய் ரசிகர்கள் கடும் கோபமடைந்து இருக்கின்றனர்.
அவர்களின் போட்டி சேனலான சன் டிவி தான் பீஸ்ட் படத்தை தயாரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பீஸ்ட்டுக்கு வந்திருக்கும் நெகடிவ் விமர்சனங்கள் ஒரு பக்கம் என்றால், விஜய் டிவி இப்படி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்புவது பற்றி கடும் கோபத்துடன் ட்விட்டரில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ராமர் அய்யா ???
— Vijay Television (@vijaytelevision) April 13, 2022
உடன்பிறப்பே - நாளை மாலை 4 மணிக்கு நம்ம விஜய் டிவில..#Udanpirappe #TamilNewYearSpecial #VijayTelevision pic.twitter.com/cYC1jzjKXU