ரசிகர்களை ஏமாற்றிய பீஸ்ட்...நியாயமா நெல்சன் சார் இது
தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் பீஸ்ட். இப்படம் ரசிகர்களிடம் கவலையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது.
இந்நிலையில் பீஸ்ட் ரசிகர்கள் தாண்டி பொது மக்களிடம் போதிய வரவேற்பு பெறவில்லை, எப்போதும் விஜய் படங்கள் நன்றாக இருக்கின்றதோ இல்லையோ நல்ல வசூல் வந்துவிடும், இந்தபடம் நேற்றுக்கூட பல காட்சிகள் புல் ஆகவில்லை.
அதோடு படத்தை பார்த்த அனைவரின் கருத்தும், என்ன நெல்சன், ஏன் இப்படி என்பது தான், நெல்சனிடம் எல்லாரும் எதிர்ப்பார்த்தது ஒரு நல்ல டார்க் காமெடி படத்தில் விஜய் எப்படி வருவார் என்பது தான்.
ஆனால், இது டார்க் காமெடி படமா அல்லது விஜய் படமா என்று யாருக்குமே தெரியவில்லை, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய்காந்த் படம் பார்ப்பது போல் உள்ளது.
விஜய் ரசிகர்களே நொந்து செல்லும் அளவிற்கு பல காட்சிகள் உள்ளது, விஜய் இருந்தால் மட்டும் போதும் என்றாலும், அந்த விஜய் படத்தில் என்ன செய்கிறார் என்று பார்க்க வேண்டாமா...மீண்டு வாங்க நெல்சன்.