விஜய்யின் பீஸ்ட் பட வசூல் சாதனையை முற்றிலும் முறியடித்த KGF 2- முக்கிய இடத்தில் செம வசூல்
தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகவும் ஆவலாக பார்க்க காத்துக் கொண்டிருந்த திரைப்படம் விஜய்யின் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.
படத்தை தளபதியின் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள், ஆனால் மற்ற ரசிகர்களால் கலசையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும் தளபதி பெயர் ஒன்றே படத்தின் வசூலுக்கு ஒரு முக்கிய விஷயமாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
தற்போது படம் வெளியாகி முதல் நாள் தமிழகத்தில் ரூ. 26 கோடி வரை வசூலித்திருந்தது.
இந்த நிலையில் ஹிந்தியில் முதல் நாள் வசூலில் பீஸ்ட்டை விட அதிகம் வசூலித்து சாதனை செய்துள்ளது கன்னட திரைப்படமான KGF 2.
படம் நெட் கலெக்ஷனில் மட்டுமே ரூ. 55 கோடி வசூல் செய்ய ஆல் டைம் No. 1 படமாக அமைந்துள்ளது.
இரண்டு படங்களின் வசூல் விவரம்
- பீஸ்ட்- ரூ. 50 லட்சம் வசூல்
- KGF 2- ரூ. 55 கோடி (நெட் கலெக்ஷன்)