பீஸ்ட் படத்தின் மொத்த வசூல்.. ஒரு வருடத்தை கொண்டாடும் ரசிகர்கள்
பீஸ்ட்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களை ஏமாற்றியது. மோசமான விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூல் ரீதியாக வெற்றி என அப்படத்தை வாங்கி தமிழகத்தில் விநியோகம் செய்த உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்றுடன் பீஸ்ட் படம் வெளிவந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், இப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல் விவரம்
அதன்படி இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 109 கோடி வரை வசூல் செய்துள்ளது. தெலுங்கில் ரூ. 12 கோடி, கேரளாவில் ரூ. 11.30 கோடி, கர்நாடகாவில் ரூ. 11 கோடி, மற்ற மாநிலங்களில் ரூ. 4 கோடி மற்றும் வெளிநாட்டில் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக உலகளவில் ரூ. 213 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
முதல் மனைவியை விவாகரத்து செய்தது ஏன்? முதன்முறையாக கூறிய சீரியல் நடிகர் பப்லு

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
