இரண்டு நாள் முடிவில் உலகம் முழுவதும் விஜய்யின் பீஸ்ட் எவ்வளவு வசூல் தெரியுமா?
தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரது படம் ரிலீஸ் என்றாலே திருவிழா கோலமாக இருக்கும், பாக்ஸ் ஆபிஸும் புதிய சாதனைகளை படைக்க தயாராக இருக்கும்.
ஆனால் இந்த திரைப்படம் வசூலில் சாதனைகளை செய்யுமா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துவிட்டது. காரணம் அந்த அளவிற்கு படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வருகின்றன, தமிழகத்தை தாண்டி மற்ற இடங்களிலும் இரண்டாவது நாள் வசூல் அப்படியே குறைந்துள்ளது.
சென்னையில் இரண்டு நாள் முடிவில் ரூ. 3. 57 கோடி வரை வசூலித்திருக்கிறது.
தமிழகத்தில் முதல் நாளில் இப்படம் ரூ. 33 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ரூ. 28 கோடியே வசூலித்திருந்தது.
இந்த நிலையில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டு நாள் முடிவில் ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.