நடிகர் கார்த்தியின் மகனுக்கு வைக்கப்பட்ட அழகான பெயர், அன்புடன் அப்பா வெளியிட்ட பதிவு.
நடிகர் கார்த்தி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தற்போது கார்த்தி நடிப்பில் சுல்தான் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. மேலும் கார்த்தி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தி தனது மகனுக்கு பெயர் வைத்துள்ளது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆம், அதில் "கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம்.
உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன் அப்பா " என்ற அழகான பதிவை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
கண்ணா,
— Actor Karthi (@Karthi_Offl) March 17, 2021
அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.
அன்புடன்...
அப்பா. pic.twitter.com/O6UvID6b7X
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri