சமீபத்தில் பிறந்த தனது மகனின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட கார்த்தி- பெயர் என்ன வைத்துள்ளார்கள் தெரியுமா?
நடிகர் கார்த்தி சினிமாவில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு நுழைந்தவர். ஆரம்ப படமே அவருக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்தது.
இவரது சினிமா பயணம் ஒரே மாதிரி இருக்காது, அதாவது படங்கள் தேர்வை பற்றி தான்.
ஒரே மாதிரியாக இருக்காது, ஆயிரத்தில் ஒருவன், காஷ்மோரா, கைதி என வித்தியாசமான கதை தேர்வுகளாக இருக்கும்.
கடந்த வருடம் அக்டோபர் 20ம் தேதி கார்த்திக்கு மகன் பிறந்தார்.
தற்போது தனது மகனுக்கு கார்த்தி கந்தன் என்று பெயர் வைத்திருப்பதாக அவர் தனது குழந்தையின் அழகிய கை புகைப்படத்துடன் டுவிட்டரில் கூறியுள்ளார்.
அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
கண்ணா,
— Actor Karthi (@Karthi_Offl) March 17, 2021
அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.
அன்புடன்...
அப்பா. pic.twitter.com/O6UvID6b7X