பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் அஜித் நடித்துள்ளாரா?- இதுவரை வெளிவராத தகவல்
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியின் டாப் சீரியலாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பாகி வந்தது பாக்கியலட்சுமி தொடர்.
ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் சில வாரங்கள் விறுவிறுப்பு குறைந்து காணப்படுகிறது. எனவே TRPயிலும் பின்வாங்கி வருகிறது.
தற்போது கோபி பாக்கியா வீட்டிற்கு சென்றதால் ராதிகாவும் அங்கேயே செல்கிறார், இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அஜித் படம்
வி.சி.குகநாதன் இயக்கி தயாரித்து அஜித் நடிப்பில் வெளியான படம் மைனர் மாப்பிள்ளை. இந்தப் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க வேண்டியது பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ரஞ்சித்தாம்.
ஆனால் ரஞ்சித் வேறொரு படப்பிடிப்பில் மேலே இருந்து விழுந்து கணுக்காலில் ஏதோ அடி பட்டிருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லையாம். அந்த சமயத்தில்தான் அஜித் அமராவதி படத்தில் நடித்து முடித்து ஆசை படத்தில் கமிட் ஆகியிருந்தாராம்.
இவரை பார்த்ததும் குகநாதனுக்கு பிடித்து போகவே தான் அஜித்தை மைனர் மாப்பிள்ளை படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu