Deep fake வீடியோ.. ராஷ்மிகாவுக்கு முன்பே அந்த நடிகை பாதிக்கப்பட்டார்: சின்மயி புகார்
நடிகை ராஷ்மிகா முகத்தை மட்டும் வேறொரு பெண் உடலில் வைத்து ஒரு deep fake வீடியோவை சிலர் உருவாக்கி இணையத்தில் வைரலாக்கி இருக்கின்றனர்.
அந்த வீடியோ தனக்கு அதிர்ச்சி கொடுத்ததாக ராஷ்மிகா பதிவிட்டு இருந்தார். அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு இதை பார்த்து அதிர்ச்சி தெரிவித்து இருந்தனர்.

சிம்ரன் பாதிக்கப்பட்டார்
இந்நிலையில் பாடகி சின்மயி இந்த சர்ச்சை பற்றி பதிவிட்டு இருக்கிறார். காவலா பாடல் வெளியான நேரத்தில், அதில் சிம்ரன் ஆடுவது போல deepfake வீடியோ வெளியிட்டு இருந்தனர். அதை சிம்ரன் ஷேர் செய்திருந்தார். அதை செய்ய அவர் முதலில் அனுமதி கொடுத்தாரா என தெரியவில்லை.
தற்போது ராஷ்மிகா வீடியோ வெளியாகி இருக்கிறது. அதை பார்த்து அவர் அதிர்ச்சி ஆகி இருக்கிறார். பெண்கள் உடலை தவறாக எப்போதும் பயன்படுத்த பார்க்கும் இந்த நாடு அடுத்து இந்த deep fake பயன்படுத்தி பெண்களை மிரட்டும் என சின்மயி கூறி இருக்கிறார்.
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu