Deep fake வீடியோ.. ராஷ்மிகாவுக்கு முன்பே அந்த நடிகை பாதிக்கப்பட்டார்: சின்மயி புகார்

By Parthiban.A Nov 06, 2023 04:30 PM GMT
Report

நடிகை ராஷ்மிகா முகத்தை மட்டும் வேறொரு பெண் உடலில் வைத்து ஒரு deep fake வீடியோவை சிலர் உருவாக்கி இணையத்தில் வைரலாக்கி இருக்கின்றனர்.

அந்த வீடியோ தனக்கு அதிர்ச்சி கொடுத்ததாக ராஷ்மிகா பதிவிட்டு இருந்தார். அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு இதை பார்த்து அதிர்ச்சி தெரிவித்து இருந்தனர்.

Deep fake வீடியோ.. ராஷ்மிகாவுக்கு முன்பே அந்த நடிகை பாதிக்கப்பட்டார்: சின்மயி புகார் | Before Rashmika Simran Too Affected By Deepfake

சிம்ரன் பாதிக்கப்பட்டார்

இந்நிலையில் பாடகி சின்மயி இந்த சர்ச்சை பற்றி பதிவிட்டு இருக்கிறார். காவலா பாடல் வெளியான நேரத்தில், அதில் சிம்ரன் ஆடுவது போல deepfake வீடியோ வெளியிட்டு இருந்தனர். அதை சிம்ரன் ஷேர் செய்திருந்தார். அதை செய்ய அவர் முதலில் அனுமதி கொடுத்தாரா என தெரியவில்லை.

தற்போது ராஷ்மிகா வீடியோ வெளியாகி இருக்கிறது. அதை பார்த்து அவர் அதிர்ச்சி ஆகி இருக்கிறார். பெண்கள் உடலை தவறாக எப்போதும் பயன்படுத்த பார்க்கும் இந்த நாடு அடுத்து இந்த deep fake பயன்படுத்தி பெண்களை மிரட்டும் என சின்மயி கூறி இருக்கிறார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US